Published : 01 Dec 2019 05:01 PM
Last Updated : 01 Dec 2019 05:01 PM

பொங்கலுக்கு வெளியாகிறது 'சூரரைப் போற்று' டீஸர்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு 'சூரரைப் போற்று' வெளியாகவுள்ளது. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு சுதா கொங்காரா இயக்கும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x