Published : 01 Dec 2019 07:42 AM
Last Updated : 01 Dec 2019 07:42 AM

திரை விமர்சனம் - எனை நோக்கி பாயும் தோட்டா

மயக்கும் பாணியில் இயக் கும் கவுதம் மேனனும், நடிப்பால் அடித்துப் புரட் டும் தனுஷும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம். இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் ரசிகர்களின் எதிர் பார்ப்பை இந்தக் கூட்டணியால் பூர்த்தி செய்ய முடிந்ததா எனப் பார்க்கலாம்.

பசுமையான பொள்ளாச்சி யில் வசிக்கும் பசையான செல் வந்தர் வீட்டுப் பையன் ரகு (தனுஷ்). சென்னைக்கு வந்து படிக்கும் அவரது கல்லூரியில் சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. அதில் நடிக்கும் அறிமுகக் கதாநாயகி லேகாவுக்கும் (மேகா ஆகாஷ்), ரகுவுக்கும் கண்ட நாள் முதல் காதல் கரைபுரள்கிறது. ரகுவின் வீடு வரை வந்துவிடும் லேகாவை, பொள்ளாச்சிக்கு வந்து இழுத் துச் செல்கிறார், அவரை வைத் துப் படமெடுக்கும் அடாவடி இயக்குநரான குபேரன் (செந் தில் வீராசாமி).

லேகாவைச் சந்திக்க சென்னை வரும் ரகு, அவரைத் தேடி அலைந்து ஓய்ந்து போகிறார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னைக் காப்பாற்ற வரும்படி காதலியிடம் இருந்து அழைப்பு. மும்பைக்கு விரைந்து வரும் ரகு காதலியை மீட் டாரா? வாலிப வயதில் காணா மல்போன தனது அண்ணனை (சசிகுமார்) சந்தித்தாரா என்று கதை செல்கிறது.

கவுதம் மேனன் படங்களின் சிறப்பே, கவித்துவம் வழிந் தோடும் காதல் காட்சிகள்தான். தனக்கென வகுத்துக்கொண்ட அந்த காதல் ஏரியாவை இங்கே கொஞ்சம் பின்னால் தள்ளி வைத்திருக்கிறார். அதேசமயம் ஆக்‌ஷன், சென்டி மென்ட், மேல்தட்டு வர்க்கத்து வசனங்கள் என தனது முந்தைய படங்களின் ‘மூட்’ மற்றும் காட்சிகளை மறுபடி வெட்டி ஒட்டிச் சேர்த்திருக்கிறார்.

கண்களில் காதலைத் ததும்ப விடும் சொற்ப காட்சிகளிலும், கோபம் கொப்பளிக்கும் ஆக் ரோஷ காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தனுஷ் மீண்டும் நிரூபித்திருக் கிறார்.

நடிகையாக வரும் மேகா ஆகாஷுக்கு இது அறிமுகப் படம். அது அவரது நடிப்பிலும் தெரிகிறது. இருப் பினும், தனது சிரிப்பாலும், பளீர் தோற்றத்தாலும் அதை ஈடுசெய்கிறார்.

வில்லனாக வரும் செந்தில் வீராசாமி, தன் மனைவி, பிள்ளை களைப் போட்டு அடிக்கும் அந்த ஒரு காட்சியே அவரது ‘பொளேர்’ நடிப்புக்கு சான்று.

மண் வாடை காட்டியே பழக்கப்பட்ட சசிகுமாரும், வேல ராமமூர்த்தியும் கவுதம் மேனன் பாணியில் மாற்றிப் பேசி நடித்திருப்பது செயற்கையாக இருக்கிறது.

ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. முழு திறமை காட்டி வண்ணமயமாக விளையாடி இருக்கிறார்கள். ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ ஆகிய இரு பாடல்களின் வழியே ரசிகர்களின் மனதை விசிறிவிடுவதில் வெற்றி பெற்றிருக்கும் தர்புகா சிவா, பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார்.

கவுதம் மேனன் தனது வழக்க மான ‘லவ் - ஆக்‌ஷன்’ தோட் டாவை தனுஷ் என்ற நடிப்புத் துப்பாக்கியில் பொருத்திப் பாயவிட்டிருக்கிறார். என்னதான் தொழில்நுட்ப அம்சங்களை புத்துணர்ச்சியோடு பயன்படுத் தினாலும், தனது ‘டெம்பிளேட்’ சமாச்சாரங்களை விட்டு வெளியே வரவேண்டிய கட் டத்தை அடைந்துவிட்டார் என் பதையே ‘தோட்டா’வின் காட்சி களும், திரைக்கதையும் சொல் கின்றன.

கதாபாத்திரங்களுக்கு இடை யிலான உறவு நிலையினை முழுமைப்படுத்தி, அவற்றுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக் கும் தர்க்கத்தை வலுப்படுத்தி, திரைக்கதையை ஒரே திசை நோக்கிப் பாய விட்டிருந்தால், எடுத்துக்கொண்ட இலக்கைத் துளைத்திருக்கும் இந்த தோட்டா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x