Published : 23 Nov 2019 12:26 pm

Updated : 23 Nov 2019 12:26 pm

 

Published : 23 Nov 2019 12:26 PM
Last Updated : 23 Nov 2019 12:26 PM

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகுச் சிலை

wax-statue-erected-in-kanyakumari-for-actor-vijay

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) காலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் மாயாபுரி- மெழுகுசிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், புனிதர் அன்னை தெரசா, ஒபாமா போன்ற முக்கியமானவர்களின் 20 பேரின் சிலைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் முதன்முதலாக விஜய்க்கு சிலை வைக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக விஜயின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், "உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி. அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து
பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவருடைய ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் , புது முயற்சிகளையும் செய்து வருவது வழக்கம் . தளபதி விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .

அதில் தளபதி விஜய்யின் மெழுகு சிலையும் இணைத்துள்ளது . தளபதி விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. தளபதி விஜயின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வரும் அடுத்த படத்தை லோகேஷ் கணகராஜ் இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 64’ படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்டரி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கன்னியாகுமரி அருங்காட்சியகம்நடிகர் விஜய்விஜய்க்கு மெழுகு சிலை#Thalapathy#Vijay

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author