Published : 19 Nov 2019 04:31 PM
Last Updated : 19 Nov 2019 04:31 PM

மூத்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

மூத்த மலையாள நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள சினிமா உலகில் முன்னணிக் கதாசிரியராக வலம் வந்தவர் ஸ்ரீனிவாசன். குறிப்பாக மோகன்லாலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இவரது பல கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களாகியுள்ளன. இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிப்புக்கும் புகழ்பெற்றவர். தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவர் மகன் வினீத் ஸ்ரீனிவாசன், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.

ஸ்ரீனிவாசனுக்குக் கடந்த ஜனவரி மாதமே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. இதன் காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்னைக்குச் செல்ல கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. சீனிவாசனின் உடல் நிலை சற்று தேறிய பிறகு ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை நடைபெறும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x