Published : 17 Nov 2019 09:50 AM
Last Updated : 17 Nov 2019 09:50 AM

திரை விமர்சனம்: ஆக்‌ஷன்

மாநில முதல்வரான பழ.கருப் பையாவுக்கு 2 மகன்கள். மூத்தவர் ராம்கி, துணை முதல்வர். இளையவர் விஷால், ராணுவ கர்னல். ராம்கியை அரசி யல் வாரிசாக அறிவிக்கும் கூட்டத் துக்கு வருகிறார் தேசியக் கட்சியின் தலைவர். அங்கு குண்டுவெடிப் பில் அவர் பலியாகிவிட, கொலை பழியுடன், ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டும் ராம்கி மீது விழு கிறது. திடீரென அவர் தற்கொலை செய்துகொள்கிறார். கொலைச் சதி யின் பின்னால் இருக்கும் காரண கர்த்தாவை தேடி புறப்படுகிறார் விஷால். பல நாடுகளில் அதிரடி ஆபரேஷன்களில் இறங்கும் அவரது இலக்கு பாகிஸ்தானில் முடிகிறது. அங்கு இருக்கும் சதிகாரனை அவர் இந்தியாவுக்கு கொண்டுவந்தாரா, பழி வாங்கினாரா என்பது கதை.

குடும்பக் காட்சிகள் என்ற பெயரில் முதல் அரை மணி நேர ஃபிளாஷ் பேக்கை கடந்து வந்தால், பிறகு 2 மணி நேர ஆக்‌ஷன் காட்சி களிலும் புதுமை எதுவும் இல்லை. ராணுவ விருது வழங்கும் நிகழ்ச் சியை, நாயகன், நாயகியிடம் முத்தம் பெற அலையும் அபத்தமான காட்சி யாக சித்தரித்திருப்பதை சகிக்க முடியவில்லை.

லண்டன், கரீபியன் தீவு, துருக்கி, பாகிஸ்தான் என எங்கெங்கோ சுற்றும் சொதப்பலான திரைக்கதையில், ஒன்று துரத்துகிறார்கள்; இல்லை.. ஓடுகிறார்கள். இல்லாவிட்டால் சண்டை போடுகிறார்கள். இந்த மூன் றையும் பிரதானமாக வைத்துக் கொண்டு, அதற்காகவே சுந்தர்.சி. எழுதி இயக்கியதுபோல தெரிகிறது. ஒரு துரத்தல் ஆக்‌ஷன் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பின் னணிக் கதை இல்லை. தீவிரவாதி, பாகிஸ்தான், குண்டுவெடிப்பு என அனைத்திலும் பல ஹாலிவுட், பாலிவுட் படங்களின் சாயல்.

ரூ.4 ஆயிரம் கோடியை வாங்கி விட்டு தலைமறைவாகும் தொழிலதி பருக்கும், தீவிரவாதிக்கும் என்ன தொடர்பு என்பதை துளியூண்டுகூட சொல்லவே இல்லை. துருக்கியில் அதிநவீன பாதுகாப்பு அடுக்கு உள்ள வங்கியின் சர்வர் அறையில் புகுந்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பு வது, முதல்வரின் வீட்டிலேயே புகுந்து அவரது மகனைக் கொல்வது, சிசிடிவி யுகத்திலும், கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்துகொண்டு தேசியத் தலைவரைக் கொல்வது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை.

போதாக்குறைக்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸ், இன்டர்போல் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் விஷாலே செய்கிறார்.

சுபாஷ் என்ற ராணுவ கர்னல் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் விஷால் வழக்கம்போல ஆக்‌ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்குகிறார். அவரது வாட்டசாட்ட மான உடலும், உயரமும் அதற்கு உதவுகின்றன. எப்போதும் இறுக்க மான முகத்துடன் வரும் தமன்னா, சக ராணுவ வீராங்கனையாக விஷா லுக்கு கைகொடுக்கும் ஆக்‌ஷன் நாயகியாக கொஞ்சம் உழைத்து நடித்திருக்கிறார். தொழில்முறை கொலையாளியாக வரும் அகான்ஷா கிளாமர், ஆக்‌ஷன் இரண்டிலும் கவ னம் ஈர்க்கிறார். வில்லன் நடிகருக்கான தேர்வில் மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்திலும் முழுவதும் கோட்டை விட்டிருக்கிறார்கள். லண்டனின் தொழில்முறை ஹேக்கராக வரும் யோகிபாபு சிலகாட்சிகளே வந் தாலும் சிரிக்க வைக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறிதும் மன தில் ஒட்டாமல், படத்துக்கு இடையூ றாகவே வந்து செல்கின்றன. ஏராள மான தர்க்கப் பிழைகள் படத்தின் இறுதிவரை நம்மை சோதித்தாலும், சண்டைப் பயிற்சியாளர்கள் ‘அன் பறிவ்’ இரட்டையரின் உழைப்பும், சேஸிங் காட்சிகளில் பின்தொட ரும் டட்லியின் ஒளிப்பதிவும் இந்த குறைகளை மறைத்துவிடுகின்றன.

‘அவன் வந்தால் ஆப்ஷன் கிடை யாது.. ஆக்‌ஷன்தான்’ என்று படத் தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வரும். அதையே நம்பி, ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்று நினைத்த இயக்குநர், கதையில் கோட்டை விட்டதால் இது எடுபடாத ஆக்‌ஷன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x