Published : 16 Nov 2019 01:48 PM
Last Updated : 16 Nov 2019 01:48 PM
‘பாகமதி’ இந்தி ரீமேக்கில், அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க புமி பெட்னேகர் ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான படம் ‘பாகமதி’. ஹாரர் த்ரில்லர் படமான இது, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானது. ஜி.அசோக், இந்தப் படத்தின் கதையை எழுதி, இயக்கினார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரித்த் ஐந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான பாத்திரத்தில் அனுஷ்கா நடித்தார். ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசையமைத்தார்.
ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற இந்தப் படத்துக்கு, பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூல் கிடைத்தது. எனவே, இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இந்தி ரீமேக் உரிமையை வாங்கி தயாரிக்கிறார் நடிகர் அக்ஷய் குமார். ஜி.அசோக்கே இந்தியிலும் இயக்குகிறார்.
அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க புமி பெட்னேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயராம் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். அக்ஷய் குமாரும் இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மொத்தம் 68 நாட்கள் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT