Published : 14 Nov 2019 05:29 PM
Last Updated : 14 Nov 2019 05:29 PM

அசாமில் வசூல் சாதனை படைக்கும் 'தெறி' கதை

'ரத்னாகர்: எ நியூ மித் ஆஃப் லவ்' என்ற அசாமிய மொழி திரைப்படம் அங்கு புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

அக்டோபர் 11-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 'ரத்னாகர்' திரைப்படத்தை அசாமிய திரைப்படங்களின் சூப்பர் ஸ்டார் ஜதின் போரா இயக்கி, நடித்திருந்தார். தனது மகளின் பாதுகாப்புக்காக யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் முன்னாள் கேங்ஸ்டரின் கதை இது.

அசாமில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வட கிழக்கு மாநிலங்களிலும் 'ரத்னாகர்' மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது என படத்தை போராவுடன் இணைந்து தயாரித்துள்ள நவநிதா சர்மா போரா கூறியுள்ளார். வடகிழக்கில் 59 திரையரங்குகளிலும், அதைத் தாண்டி 12 திரையரங்குகளிலும் படம் வெளியாகியிருந்தது.

படத்தின் தயாரிப்பாளர் சித்தார் கோயங்கா பேசும்போது, "படம் இதுவரை ரூ.9 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளது. அசாமில் 9 கோடி ரூபாய் என்றால் ஒரு இந்தித் திரைப்படம் இந்தியாவில் 900 கோடி ரூபாய் வியாபாரம் செய்வதற்கு ஈடாகும்" என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ’கஞ்சன்ஜங்கா’ என்ற திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.7 கோடியை வசூலித்ததே அசாமில் இதுவரை சாதனையாக இருந்தது. ’ரத்னாகர்’ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்தடுத்து வசூல் சாதனை படைக்கும் படங்களால் அசாமியத் திரைப்பட வியாபாரத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வழக்கமாக இந்திப் படங்களுக்காக அசாமியப் படங்கள் வழிவிடும். இம்முறை அசாமிய படங்கள் முக்கியத்துவம் பெற்று இந்திப் படங்களை ஒதுக்கியுள்ளது என்று பெருமையுடன் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x