Published : 14 Nov 2019 11:57 AM
Last Updated : 14 Nov 2019 11:57 AM

ட்விட்டர் வாக்கெடுப்பு: 'விஸ்வாசம்' வெற்றி 

ட்விட்டர் நடத்திய வாக்கெடுப்பில் 44% வாக்குகளைக் கைப்பற்றி 'விஸ்வாசம்' வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் வெடித்துள்ளது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர். அதில் 'விஸ்வாசம்' முதலிடத்தைப் பிடித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி 'விஸ்வாசம்' படத்தைப் பற்றியே நிறைய பேர் ட்வீட் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகின.

இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். 'விஸ்வாசம்' படக்குழுவினர் பலரும் நன்றி தெரிவித்து வந்த வேளையில் ட்விட்டர் இந்தியா தங்களது ட்விட்டர் பதிவில், "இந்த ட்வீட் குறித்து நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது எங்களுக்கும் ஆர்வத்தைத் தருகிறது. ஆனால் இது இந்த வருடம் தாக்கத்தை ஏற்படுத்திய சில விஷயங்களின் பிரதிநிதித்துவமே. 2019-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விஷயங்கள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலுக்கு நீங்கள் இன்னமும் சற்று காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தது.

மேலும், இந்த வருடத்தின் ட்விட்டர் பட்டியலில் ஒரு தமிழ்ப் படம் இடம்பெறுமா?. அப்படியென்றால் பதில் சொல்லுங்களேன் என வாக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 'விஸ்வாசம்', 'பிகில்', 'என்.ஜி.கே' மற்றும் உங்கள் விருப்பம் என்ன என்பதை ட்வீட் செய்யுங்கள் ஆகியவை இடம்பெற்றன.

இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று விஜய் - அஜித் ரசிகர்கள் போட்டியிட்டனர். இதில் முதலில் 'பிகில்' படத்துக்கே வாக்குகள் அதிகமாக இருந்தன. இறுதியில் அஜித் ரசிகர்கள் பலரும் வாக்களித்து, 44% வாக்குகள் பெற்று 'விஸ்வாசம்' வெற்றி பெற்றுள்ளது. 40% வாக்குகள் 'பிகில்' படத்துக்குக் கிடைத்தது. 'என்.ஜி.கே' படத்துக்கு 14% வாக்குகள், 'உங்கள் விருப்பத்தை ட்வீட் செய்யுங்கள்' என்பதற்கு 2% வாக்குகளும் கிடைத்தது.

இந்த வாக்கெடுப்பு முடிவடைந்து விட்டாலும், அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையாக இது உருவெடுத்துள்ளது. எப்போதுமே நாங்கள் தான் ஆன்லைனில் கெத்து என்று அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களைக் கிண்டல் செய்து வருகிறார்கள். விஜய் ரசிகர்களோ அஜித்துக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இதற்குப் பதிலடியாக அஜித் ரசிகர்களும் விஜய்க்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்ட் உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.

ஆனால், 2019-ம் ஆண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகள் பட்டியலை டிசம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளது ட்விட்டர். அதற்கான முன்னோட்டமே விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

— Twitter India (@TwitterIndia) November 13, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x