Published : 13 Nov 2019 12:38 PM
Last Updated : 13 Nov 2019 12:38 PM

'வானம் கொட்டட்டும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதனிடையே தன்னுடைய தயாரிப்பில் 'வானம் கொட்டட்டும்' என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்கி வருகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் மூலம் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 2020-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, ஒளிப்பதிவாளராக ப்ரீதா, கலை இயக்குநராக கதிர், எடிட்டராக சங்கதமிழன் ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x