Published : 09 Nov 2019 02:15 PM
Last Updated : 09 Nov 2019 02:15 PM

உண்மைக்கான தீர்ப்பின் தருணம்: அயோத்தி தீர்ப்பு குறித்து கெளதமி

இது உண்மைக்கான தீர்ப்பின் தருணம் என்று அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கெளதமி கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையிலிருந்த அயோத்தி நில விவகார வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 8) தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதற்குப் பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக நடிகை கெளதமி தனது ட்விட்டர் பதிவில், "அயோத்தி வழக்கு பற்றிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நான் வணங்குகிறேன். ஒரு பிரிவினரின் நம்பிக்கையை, மறுபிரிவினர் மறுக்க முடியாது.

இது வெற்றி - தோல்விக்கான தருணம் அல்ல. உண்மைக்கான தீர்ப்பின் தருணம். 500 வருடப் பிரச்சினைக்குத் தீர்வு. ஒரே தேசமாக, ஒரே மக்களாக நாம் தொடர்ந்து அமைதியாக, இணக்கமாக நடக்க, இது நமக்கு ஒரு மைல்கல். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x