Published : 08 Nov 2019 10:45 AM
Last Updated : 08 Nov 2019 10:45 AM

கானா பாட்டும்.. ஆட்டமும்!

பெப்பர்ஸ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி ‘கானா பேட்டை’. இது வாரம்தோறும் ஞாயிறு இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகிறது.

ஒரு கானா பாடல் எப்படி உருவாகிறது, கானா பாடகர்கள் எப்படி உருவாகின்றனர், கானா பாட்டுக்கு என்று தனி வாத்தியார்கள் இருக்கிறார்களா, கானா என்ற பெயர் வந்தது எப்படி..

என பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லும் நிகழ்ச்சி இது. திறமையான கானா பாடகர்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே சந்தித்து, அவர்களது இசை அனுபவங்களை கேட்டு, கலக்கலான கானா பாடல்களையும் பாடவைத்து, ஆடவைத்து தாளம் போடவைக்கும் நிகழ்ச்சி ‘கானா பேட்டை’ என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x