Published : 07 Nov 2019 07:47 PM
Last Updated : 07 Nov 2019 07:47 PM

ஒரே சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள்: 'தர்பார்' மோஷன் போஸ்டரை வெளியிட்டு சல்மான் கான் வாழ்த்து

ஒரே சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள் என்று 'தர்பார்' மோஷன் போஸ்டரை வெளியிட்டு சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று (நவம்பர் 7) வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் இந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிட்டனர். இதன் தீம் மியூசிக் மற்றும் ரஜினியின் ஸ்டைலான லுக் ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே இந்தி போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "என் வாழ்த்துகள் வெறும் சூப்பர் ஸ்டாருக்கு அல்ல, ஒரே சூப்பர் ஸ்டாருக்கு !" என்று தெரிவித்துள்ளார் சல்மான் கான். 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாஸின் அப்பா பெயர். 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x