Published : 02 Nov 2019 08:04 PM
Last Updated : 02 Nov 2019 08:04 PM
கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்து வரும் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பல வருடங்களுக்கு முன் விஜய் நடிக்க, கெளதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்: அத்தியாயம் ஒன்று' என்ற திரைப்படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்புக்குச் செல்லவில்லை என்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்று அறிவித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது.
தற்போது அந்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றி வருணை நாயகனாக வைத்து படமாக்கி வந்தார் கெளதம் மேனன். வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. 'ஜோஷ்வா: இமை போல் காக்க' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதில் நாயகியாகப் புதுமுக நடிகை ராஹி நடித்துள்ளார்.
வேறு யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்ற விபரத்தைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. யார் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்பதில் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. ஆனால், படத்தின் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டார் கெளதம் மேனன். 'ஜோஷ்வா: இமை போல் காக்க' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், இந்தப் படம் 2020-ம் ஆண்டு காதலர் தின வெளியீடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.
இந்தப் படம் தொடர்பாக கெளதம் மேனன் தனது ட்விட்டர் பதிவில் "எனது நாயகன் வருணுடன் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை உருவாக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் சில ஸ்டைலிஷான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும், சில ஆக்ஷன் காட்சிகளைச் செய்யத் தயாராகவும் இருக்கிறார். அந்த ஆக்ஷன் காட்சிகள் யாவும் எனது சண்டை இயக்குநர் யானிக் பென் இல்லாமல் சாத்தியமில்லை. நன்றி ஹோஷ்வா படக்குழு" என்று தெரிவித்துள்ளார்.
It’s been exciting to film a complete action flick with my hero Varun who’s pulled off some stylish action sequences and is ready to do more. #Joshua Imai pol kaakha..
And this action wouldn’t have been possible without my stunt director Yannick Ben. Thank you team Joshua pic.twitter.com/REa6QjMCcL— Gauthamvasudevmenon (@menongautham) November 2, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT