Published : 02 Nov 2019 06:31 AM
Last Updated : 02 Nov 2019 06:31 AM

ஆன்லைன் வியாபார விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை

ஆன்லைன் பலசரக்கு விளம்பரத் தில் விஜய் சேதுபதி நடித்துள்ள தற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் பலசரக்கு வியா பார செயலி (App) தொடர்பான விளம்பரம் ஒன்று தொலைக் காட்சிகள், சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒளிபரப்பாகிறது. அனைத்து விதமான மளிகைப் பொருட்களையும் இதில் வாங்கிக் கொள்ளலாம் என்ற கருத்துடன் வரும் இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதற்கு வணிகர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். விவசாயிகள், சிறு வியாபாரி களுக்கு எதிராக தொடங்கப்பட் டுள்ள செயலிக்கு விஜய் சேதுபதி ஆதரவு கொடுப்பதா? என்ற ரீதியில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை கண்டிக்கும் விதமாக அவரது அலுவலகத்தை விரைவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கேட்டபோது, தமிழ் நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறியதாவது:

சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தை யும் அனுமதிக்க மாட்டோம். அதற் காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஆன்லைன் வர்த்த கத்தை ஊக்குவிக்கும் விளம்பரத் தில் விஜய்சேதுபதி நடித்திருப் பது அதிருப்தியையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற வணிக விளம்பரங் களில் நடிக்கும்போது, அது மக்களுக்கு நல்லதா, கெட்டதா? என்று யோசித்து நடிகர்கள் செயல்பட வேண்டும். மக்களால் பிரபலம் அடையும் நடிகர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் ஈடுபடக் கூடாது.

விஜய் சேதுபதி நல்ல நடிகர்தான். அதற்காக, மக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயத்தை பரப்ப முயற்சித்தால் அவருக்கும் வணிகர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும்.

வெளிநாட்டு குளிர்பானம், உணவுப் பொருட்கள் தொடர் பான விளம்பரங்களில் பிரபல நடிகர், நடிகைகள் நடித்தபோதும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித் தோம்.

நடிகர்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கமர்ஷியல் என்ற போர்வையில், மக்களை தவறான பக்கம் திசைதிருப்பக் கூடாது.

செயலியை நடத்தும் நிறுவனம் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். அதுகுறித்து முழுமை யாக தெரிந்த பிறகு, எங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்வோம்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறி னார்.

இதுசம்பந்தமாக விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஆன்லைன் வியாபாரம் என்ற வார்த்தையால் சிறு வியாபாரிகள், வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந் துள்ளதாக தெரிகிறது. அந்த விளம்பர நிறுவனத்தின் வியாபார நோக்கம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனமே விரை வில் விளக்கம் அளிக்க இருக்கிறது. அதற்கு முன்பு நாங்கள் பேசுவது சரியாக இருக்காது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x