Published : 29 Oct 2019 01:32 PM
Last Updated : 29 Oct 2019 01:32 PM

காதலர் தினத்தன்று வெளியாகிறது '96' தெலுங்கு ரீமேக்?

சர்வானந்த், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் '96' தெலுங்கு ரீமேக் காதலர் தினத்தன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டது. கோவிந் வசந்தா இசையமைத்த இந்தப் படத்துக்கும், இதில் இடம்பெற்ற பாடல்களுக்கும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு கைப்பற்றினார். பிரேம்குமாரே இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

'96' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக சில நாட்களுக்கு முன்பு சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால், படம் எப்போது வெளியீடு என்ற பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. தில் ராஜு தயாரிப்பில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் சங்கராந்திக்கு வெளியாகவுள்ளது.

இதனால், அந்தப் படம் வெளியீட்டுக்குப் பிறகு காதலர் தினத்தன்று '96' தெலுங்கு ரீமேக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x