Published : 24 Oct 2019 07:52 PM
Last Updated : 24 Oct 2019 07:52 PM

‘பிகில்’ புள்ளிங்களுக்கு இன்றிரவு ஒரு சர்ப்ரைஸ்: அட்லீ தகவல்

விஜய் - அட்லீ கூட்டணியில் நாளை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அப்போது, ரசிகர்களுக்கு இடையே ‘பிகில்’ படத்தில் நடித்துள்ள கதிர், பாடலாசிரியர் விவேக், அட்லீ மனைவி ப்ரியா ஆகியோரும் கேள்விகள் கேட்டனர். அதற்கு அட்லீ அளித்த பதில்கள்...

கதிர்: அண்ணா, என்னைப் பற்றி என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?

அட்லீ: உன்னைப் பற்றி என்னடா சொல்றது? நீ என் செல்லக்குட்டி, என் பட்டு. நீ ஒரு ராக் ஸ்டார். வெறித்தனம் பண்றோம்.

பாடலாசிரியர் விவேக்: புள்ளிங்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்கணும். கூடுதலாக உள்ள பாடலின் வரிகளைக் கொடுக்கலாமா? உங்களை நம்பி இருக்குற நம்ம புள்ளிங்களுக்கு என்ன சொல்லப் போறீங்க? சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க...

அட்லீ: செஞ்சிட்டா போச்சு. நல்ல நேரம் பார்த்து இன்னைக்கு நீங்களே போட்டுடுங்க அண்ணா.

ப்ரியா அட்லீ: ஏய் பாப்பா... நீ படம் முடிச்சிட்டு என்கூட நேரம் செலவழிக்காம இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருக்க?

அட்லீ: இதோ வந்துட்டேன் பாப்பா... 5 நிமிடங்கள். இதோ... இதோ...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x