Published : 20 Oct 2019 10:16 AM
Last Updated : 20 Oct 2019 10:16 AM

கேரம் விளையாட்டின் இன்றைய நிலையை விளக்கும் ஆவணப்படம்: திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு

சதீஷ் கணபதி

வா.சங்கர்

சென்னை

சென்னையில் கேரம் விளையாட்டு இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் விதமாக 30 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தை சென் னையைச் சேர்ந்த விளம்பரப் படங்களைத் தயாரிக்கும் நிறுவன மான ஐவி லீக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. குமரன் சில்க்ஸ், என்ஏசி ஜுவல் லர்ஸ், கோல்ட் வின்னர் உட்பட ஏராளமான விளம்பரப் படங்களை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

கேரம் விளையாட்டு தொடர் பான ஆவணப் படம் குறித்து, நிறுவனத்தின் இயக்குநர் சதீஷ் கணபதி கூறும்போது, “இந்தியா வில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை மற்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

கேரம் விளையாட்டு என்பது நாம் அனைவரும் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுதான். தமிழ்நாட்டில் குறிப்பாக வட சென்னை பகுதியில் கேரம் விளையாட்டு மூலம் ஏராளமான வீரர்கள் உருவாகி சாதனை படைத்துள்ளனர். கேரம் வீரர் மரிய இருதயம் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர், ஏராளமான சர்வதேசப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒன்றைக் கைப்பற்றியவர். இவர் வடசென்னையைச் சேர்ந்தவர்தான்.

கிரிக்கெட் வீரர்களைத் தெரிந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மரிய இருதயத்தைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விளையாட்டை பின்பற்றும் ஒரு சிலரே கேரம் சாம்பியன்களை தெரிந்திருக்கின்றனர். நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் தனுஷுக்கு கேரம் பயிற்சி அளித்தவர் மரிய இருதயம்தான்.

கேரம் விளையாட்டின் முக்கியத் துவம், கேரம் மூலம் உருவான உலக சாம்பியன்கள், தேசிய சாம்பியன்கள், வடசென்னையில் கேரம் விளையாட்டின் இன்றைய நிலை குறித்து விளக்கவே இந்த ஆவணப் படம் தயாரித்துள்ளோம்.

வடசென்னையிலிருந்து 50-க் கும் மேற்பட்ட தேசிய சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். ஆனால் இப் போது அங்கு நிலைமை மாறியிருக் கிறது. கஸ்டம்ஸ், ஓஎன்ஜிசி, ஏர் இந்தியா, ஐஓசி போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமே கேரம் விளையாட்டை ஆடும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி பகுதியில் ஒரு பிரியாணிக் கடை உள்ளது. அந்தக் கடையை ஒட்டி அமைக்கப் பட்டுள்ள ஒரு ஷெட்டில் சிறுவர்கள் கேரம் பயிற்சி பெறுவதற்கு வசதி செய்து தந்துள்ளார் அங்குள்ள கேரம் விளையாட்டை நேசிக்கும் ஒரு முஸ்லிம். அப்படியாவது அந்த ஏழைக் குழந்தைகளுக்கு விடிவுகாலம் வரவேண்டும் என்பது அவரது ஆசை. விடியற்காலை 5 மணிக்கு முன்னதாகவே 5 வயது முதல் 8 வயது வரையுள்ள ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு வந்து கேரம் பயிற்சி பெறுகின்றனர். விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்ற வெறி, இலக்கு, மன உறுதியுடன் அவர்கள் விளையாடி வருகின்றனர்.

இதற்காக இங்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்களாகவே இங்கு விளையாடி பயிற்சி பெறுகின்றனர்.

இதுபோன்ற கேரம் விளையாட்டின் நிலையை இந்த ஆவணப்படம் எடுத்துச் சொல்கிறது. படத்தில் மரிய இருதயம், தேசிய கேரம் விளையாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவர் பங்காருபாபு உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ‘ஒயிட் ஸ்லாம் - தி ஐரனி அன்ட் எக்ஸ்டசி’ என்று பெயரிட்டுள்ளோம். இந்த ஆவணப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு சென்னையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டவும் முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆவணப்படத்தின் சாராம் சம் என்னவென்றால், கேரம் விளையாட்டு மூலம் வட சென்னையில் வசிக்கும் பொரு ளாதாரரீதியாக பின்தங்கிய மக்கள் தங்களின் போராட்டம், மன உறுதி, ஒரே இலக்கை நோக்கிய பயணம் மூலம் தங்களின் இலக்கை அடை வது குறித்து வெளியுலகுக்கு அறிவிப்பதே ஆகும். முன்னாள் உலக சாம்பியன் மரிய இருத யத்தை முன்மாதிரியாகவும், ஹீரோ வாகவும் கொண்டு வடசென்னை யிலுள்ள இளைஞர்கள் கேரம் விளையாட்டை மிகவும் ஆர்வத் துடனும், துடிப்புடனும் விளையாடு கிறார்கள்.

வடசென்னை என்றாலே ரவுடிகள் வசிக்கும் பகுதி என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால் அங்கு ஏராளமான கேரம் சாம்பியன்கள் வசிக்கிறார்கள். தங்களது மனோதிடத்தின் மூலம் விளையாட்டில் சாதிக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான் இந்தப் படத்தின் நோக்கம்.

சென்னையை கேரம் விளை யாட்டின் தொட்டில் என்று சொல் வார்கள். ஆனால் முன்பு ஏராள மான சாம்பியன்கள் உருவானது போல் இப்போது உருவாவ தில்லை. ஏராளமான சாம்பியன் கள் உருவாகவேண்டும் என்பது தான் எங்களது ஆசை. ஆவணப் படத்துக்காக ஒரு டிரைலரை உருவாக்கியுள்ளோம். அதை ஐவி லீக் புரொடக்ஷன்ஸ் பெயரிலுள்ள யூடியூப் சானலில் காணலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x