Published : 15 Oct 2019 07:07 PM
Last Updated : 15 Oct 2019 07:07 PM

'சூரரைப் போற்று' நிறைவு: சூர்யாவின் அடுத்த படம் என்ன?

'சூரரைப் போற்று' படத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சூர்யாவின் அடுத்த பட இயக்குநர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குத் தேதிகள் கொடுத்திருந்தார் சூர்யா. ஆனால் ரஜினி - சிவா படம் பண்ணுவதால், சூர்யா - சிவா கூட்டணி படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இயக்குநர்கள் பாலா, ஹரி உள்ளிட்டோர் சூர்யாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இருவருமே தங்களுடைய கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருவரில் ஒருவரது படம் உடனடியாக தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, 'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எந்த இயக்குநரை சூர்யா தேர்வு செய்யப் போகிறார் என்பது தீபாவளிக்கு முன்பாக தெரியவரும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x