Published : 13 Oct 2019 07:43 PM
Last Updated : 13 Oct 2019 07:43 PM
மருத்துவரைப் பாருங்கள் என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் நவீன் - மீரா மிதுன் இருவரும் மோதிக் கொண்டனர். இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
தற்போது இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளது படக்குழு. மேலும், புதிதாக அக்ஷரா ஹாசனையும் ஒப்பந்தம் செய்து அவரும் படக்குழுவினருடன் வெளிநாடு சென்றுள்ளார். ,முதலில் அக்ஷரா ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானவர் மீரா மிதுன் என தகவல் வெளியானது. இது தொடர்பாக மீரா மிதுனும் கடும் காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில், "’அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் நான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது...." என்று தெரிவித்துள்ளார்.
நவீனின் இந்த ட்வீட்களுக்கு மீரா மிதுன், "உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா. ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை வேறு என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார்.
தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்.
நான் இதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார். முன்பாக பெரிய அப்பாவும், கோலிவுட்டும் நட்சத்திர நடிகர்களின் குழந்தைகளையே விரும்புகிறது. திறமையானவர்களை விரும்புவதில்லை. அப்படி யாராவது பிரபலமாகிவிட்டால் உடனடியாக படங்களிலிருந்து அவரது காட்சிகள் மலிவான உத்திகளால் நீக்கப்படுகின்றன. எனது முந்தைய நேரங்கள் இப்படி நிறைய வீணடிக்கப்பட்டுள்ளன” என்று கடுமையாகச் சாடினார் மீரா மிதுன்.
மீரா மிதுனின் தொடர் ட்வீட்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இயக்குநர் நவீன், "ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நானல்ல. பெண்ணாக எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே என்னை விடத் துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள். இது தான் உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு, நான் அளிக்கும் கடைசி பதில்" என்று தெரிவித்தார்.
நவீனின் இந்த ட்வீட்டுக்கு கடும் கோபமாக, "வார்த்தைகளில் கவனம். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.
நவீன் - மீரா மிதுன் மோதல் ட்விட்டர் தளத்தில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும், 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மீரா மிதுன். அவரது காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
Mind your words and who gave you the authority to say a woman to go and meet a doctor. I have AV proof of our conversations regd movie and the role . If i expose that it ll affect not only you but also your family woman. Shall I proceed ? Do you the guts to face the same ? https://t.co/7sdA37tLA6
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT