Published : 09 Oct 2019 12:40 PM
Last Updated : 09 Oct 2019 12:40 PM

27 வருடங்கள் கழித்து மீண்டும் அரவிந்த்சாமியுடன் நடிக்கும் மதுபாலா

கோப்புப் படம்

மதுபாலா 27 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகர் அரவிந்த்சாமியுடன் நடிக்க உள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இதில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மைசூரில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தில் மதுபாலாவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

'அழகன்' படம் மூலம் நடிகையாக அறிமுகமான மதுபாலா தமிழில் 'ரோஜா', 'ஜென்டில்மேன்', 'மிஸ்டர் ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தனது பெயரை மதூ என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

1992-ல் 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருந்த மதூ, 27 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் 'தலைவி' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவரது கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

நவம்பர் அல்லது டிசம்பர் முதல் மதூ 'தலைவி' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x