Published : 01 Oct 2019 10:40 AM
Last Updated : 01 Oct 2019 10:40 AM

ட்யூமருக்கு அறுவை சிகிச்சை: வைரலாகும் சனம் ஷெட்டியின் பதிவு 

ட்யூமருக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக் பாஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள தர்ஷனின் காதலியாவார். பிக் பாஸ் போட்டி தொடர்பாக இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகின. மேலும், தர்ஷனைப் பிரிவதாக இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தனர்.

தற்போது பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார் தர்ஷன். இதனைத் தொடர்ந்து தர்ஷனுடன் இருக்கும் புகைப்படத்தை சனம் ஷெட்டி வெளியிட்டார். இந்நிலையில், நேற்றிரவு (அக்டோபர் 1) சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் வைரலானது. அதில், "சில மாதங்களுக்கு முன்பு ட்யூமர் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அதை அலட்சியமாக விட்டதால் சிக்கலாகி தற்போது இந்த அவசர அறுவை சிகிச்சை.

உங்கள் உடல்நலனில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்பது அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே. என்ன நடந்தாலும் என் பக்கம் இருக்கும் நிற்கும் என் அம்மாவுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும் விரைவில் குணமாகிவிடுவீர்கள் எனப் பதிலளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 1) காலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்வைத் தரும். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் இரு நாட்களில் நான் மீண்டும் சரி ஆகிவிடுவேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு. என்னுடைய மருத்துவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x