Published : 17 Sep 2019 11:53 AM
Last Updated : 17 Sep 2019 11:53 AM
நெட் ஃபிளிக்ஸ் வெப் சீரிஸுக்கான பணிகளை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் படத்தின் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் விக்னேஷ் சிவன்
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
அதன் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்காக கதையொன்றை இயக்கி வந்தார் விக்னேஷ் சிவன். இதில் அஞ்சலி, கல்கி கொச்சிலின் நடித்து வந்தார்கள்.
இது ஆந்தாலஜி பாணியிலான படமாகும். கவுதம் மேனன், வெற்றி மாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், இதன் பணிகள் பாதிக்கும் என விக்னேஷ் சிவன் எண்ணியுள்ளார்.
அதனால் முதல் நபராக நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸ் பணிகளுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதன் படப்பிடிப்பு முழுக்கவே சென்னையிலேயே நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இதர இயக்குநர்களின் கதைகள் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தைத் தயாரித்துக் கொண்டே, சிவகார்த்திகேயன் படத்துக்கான முதற்கட்டப் பணிகளையும் விக்னேஷ் சிவன் கவனித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT