Published : 14 Sep 2019 10:17 AM
Last Updated : 14 Sep 2019 10:17 AM

தனுஷுடன் கைகோர்க்கிறேன்: மாரி செல்வராஜ் உற்சாகம்

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதை தனது முதல் படமான, பரியேறும் பெருமாளுக்கு பெற்ற பிறகு ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் அதன் இயக்குநர் மாரி செல்வராஜ். பலரும் அவருடன் புகைப்படம் எடுத்தப்படி இருந்தனர். குறைவான அவகாசத்தில் இயல்பாக பேசினார். அப்போது அவர் கூறியது:

கேள்வி: இப்படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பதில்: முதல் படத்துக்கு விருதெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை. இப்போதுதான் படம் எடுக்க கற்று வருகிறேன். அப்படத்தில் குறைகளும் இருக்கிறது. ஐந்தாறு படத்துக்கு பிறகே இதை பற்றி நினைக்க முடியும். நேர்மையாக இயங்கினால் மக்களிடம் சென்றடைய முடியும் என்பதை உணர்ந்தேன்.

கேள்வி: இப்படம் பற்றி மக்கள்ஆர்வமாக பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: திரைப்படம் மக்களுக்கானது என்பதையும், அதன் தேவையையும் உணர முடிந்தது. இனி ஏனோ, தானோவென்று படம் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தேன். பல கேள்விகளை இன்னும் எழுப்பியபடி இருப்பது வியப்பாக இருக்கிறது.

கேள்வி: அடுத்த படம் எப்போது? அதில் எதை பற்றி பேச போகிறீர்கள்?

பதில்: பரியேறும் பெருமாளை பார்த்துதான் தனுஷ் அடுத்த வாய்ப்பை தந்துள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்குகிறோம். அதுவும் மக்களுக்கான படமாகவே இருக்கும். இப்படமும் முக்கிய விஷயத்தை பற்றி பேசும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x