செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 14:30 pm

Updated : : 12 Sep 2019 14:30 pm

 

சிபிராஜ் படத்தில் 2 ஹீரோயின்கள்

sibiraj-new-movie-details

‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கியுள்ள புதிய படத்தில், ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார்.

‘மதுபானக்கடை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அரசியலை நையாண்டி செய்யும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. ரஃபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார். 2012-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.

‘மதுபானக்கடை’ படத்துக்குப் பிறகு வேறெந்த படத்தையும் இயக்காத கமலக்கண்ணன், கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘ரங்கா’, ‘மாயோன்’, ‘வால்டர்’, ‘ரேஞ்சர்’, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படம் என 6 படங்கள் தற்போது சிபிராஜ் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


SibirajSibiraj new movieAndreaAthulya raviKamalakannanசிபிராஜ்மதுபானக்கடைகமலக்கண்ணன்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்ஆண்ட்ரியாஅதுல்யா ரவி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author