செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 14:05 pm

Updated : : 12 Sep 2019 14:05 pm

 

கயல் ஆனந்தி நடிக்கும் ‘கமலி’

kayal-anandhi-new-movie-title-is-kamali

ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆனந்தி.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆனந்தி நடிப்பில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘எங்கே அந்த வான்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனுவுடன் ஆனந்தி நடிக்கும் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா, த்ரிஷா போல நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஆனந்தி. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இந்தப் படத்துக்கு ‘கமலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது மாறவும் வாய்ப்பு இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம், தமிழகத்தில் நடக்கும் சாதியக் கொடுமைகளைப் பற்றித் தெளிவாகப் பேசியது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது.


Actress anandhiKayal anandhiKayal movieEnge antha vaanPariyerum perumalPa ranjithகயல் ஆனந்திகமலிபரியேறும் பெருமாள்இரண்டாம்  உலகப்போரின் கடைசி குண்டுஅலாவுதீனின் அற்புத கேமராஎங்கே அந்த வான்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author