Published : 07 Sep 2019 03:04 PM
Last Updated : 07 Sep 2019 03:04 PM

ஜெ. வெப் சீரிஸ் 'குயின்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'குயின்' வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா, பிரியதர்ஷினி ஆகியோர் முயற்சி எடுத்தனர். இதில், பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா பாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெப் சீரிஸ் உருவாகவுள்ளது.

இதில் சிறு வயது ஜெயலலிதாவாக அனிகாவும், வயது அதிகமானவராக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர். சோமன் பாபுவாக வம்சி கிருஷ்ணா, எம்.ஜி.ஆராக இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றாலும், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் உள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே முடிவடையும் நிலையில் இருப்பதால், 'குயின்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அதிமுகவின் சேலை அணிந்து ரம்யா கிருஷ்ணன் பேசுவது போன்று ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளது படக்குழு.

இந்த வெப் சீரிஸை கௌதம் மேனனுடன் இணைந்து 'கிடாரி' படத்தின் இயக்குநர் பிரசாத் முருகேசனும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x