Published : 05 Sep 2019 05:28 PM
Last Updated : 05 Sep 2019 05:28 PM

நயன்தாரா வில்லனாக 'ஸாக்ரெட் கேம்ஸ்' நடிகர் ஒப்பந்தம்

நயன்தாராவின் அடுத்த படத்தில அவருக்கு எதிரான வில்லனாக நடிக்க 'ஸாக்ரெட் கேம்ஸ்' வெப் சீரிஸ் மூலம் பிரபலமான லூக் கென்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரிய நாயகர்களுக்கு இணையான ரசிகர்களையும், ஓப்பனிங்கையும் கொண்டவர் நயன்தாரா. நயன்தாராவை மையமாக வைத்தே பல படங்கள் வெளியாகிவிட்டன. அனைத்துப் படங்களும் வெற்றிபெறவில்லை என்றாலும் அவருக்கான சந்தை இன்னும் மாறவில்லை.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக 'தர்பார்', சிரஞ்சீவியின் 'சை ரா நரசிம்ம ரெட்டி', விஜய் ஜோடியாக 'பிகில்' உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் நயன்தாராவை வைத்துப் படம் தயாரிக்கிறார்.

'அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். நயன்தாராவுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில், நெட் ஃபிளிக்ஸில் பிரபலமான இந்திய வெப் சீரிஸான 'ஸாக்ரெட் கேம்ஸி'ல் மால்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த லூக் கென்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x