Published : 04 Sep 2019 10:04 AM
Last Updated : 04 Sep 2019 10:04 AM

யோகிபாபு, கருணாகரனின் காமெடி பயணம்!

யோகி பாபு, கருணாகரன் இருவரும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் களத்தில் உருவாகும் ‘ட்ரிப்’ என்ற திரில்லர் படத்தில் இணைகின்றனர். ‘டார்லிங்’, ‘100’ ஆகிய படங்களின் இயக்குநர் சாம் ஆன்டனிடம் இணை இயக்குநராக இருந்த டென்னிஸ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து டென்னிஸ் கூறியதாவது: ‘ட்ரிப்’ திரைப்படம் சுற்றுலா பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர். இரு நண்பர்கள் ஓர் இலக்கை நோக்கி பயணம் செல்கின்றனர். வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அப்பயணத்தை சாகசப் பயணம் (அட்வெஞ்சர்) ஆக்குகிறது. நடுவில், வேறொரு பயணத்தில் உள்ள 5 பசங்க, 4 பெண்களை சந்திக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதுவே கதை.

யோகிபாபுவுடன் பயணிக்கும் கதாபாத்திரம் என்றதும், கருணாகரன்தான் நினைவுக்கு வந்தார். இருவரது டைமிங் காமெடியும், தனித்திறமையும் இப்படத்தின் கதைக்கு மிகவும் அவசியமானது. நடிகை சுனைனா முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். இப்படத்தை ஓணம் கொண்டாட்டத்தோடு வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளோம். தலக்கோணம், கொடைக்கானல், சென்னையில் ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x