Published : 27 Aug 2019 02:18 PM
Last Updated : 27 Aug 2019 02:18 PM

’ப்ரூஸ் லீ சர்ச்சை’ - இயக்குநர் டரண்டினோவுக்கு ஆதரவு தெரிவித்த அந்தோனியோ பாந்தரஸ்

வாஷிங்டன்

மறைந்த நடிகர் ப்ரூஸ் லீயை தவறாக சித்தரிப்பதாக 'Once upon a time in hollywood'க்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் அந்தோனியோ பாந்தரஸ் அப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் குவெண்டின் டரண்டினோவின் ஒன்பதாவது படம் 'Once upon a time in hollywood’. இப்படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, ப்ராட் பிட், மார்காட் ராபி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இப்படத்தில் மறைந்த நடிகர் ப்ரூஸ் லீயை தவறாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைதளங்களில் உலகெங்கும் உள்ள ப்ரூஸ் லீயின் ரசிகர்கள் டரண்டினோவையும் படக்குழுவையும் சாடி வந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரித்திருந்த ப்ரூஸ் லீயின் மகள் ஷானோன், “என் தந்தையை பார்த்து மக்கள் சிரித்ததை திரையரங்கில் அமர்ந்து பார்க்க மிகவும் அசவுகரியமாக இருந்தது” என்று கடுமையான தொனியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான அந்தோனியோ பாந்தரஸ் ப்ரூஸ் லீ சர்ச்சை விவகாரத்தில் இயக்குநர் டரண்டினோவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,

“ஒரு கலைஞன் என்பவன் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பது என் எண்ணம். அதே போல் அவனது படங்களை பார்க்கவும் நிராகரிக்கவும் மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனக்கு டரண்டினோவின் இயக்கம் பிடிக்கவில்லை என்றால் நான் அவரது படங்களை போய் பார்க்கவே மாட்டேன். சில நேரங்களில் என்னை சங்கடப்படுத்தும் சில விஷயங்கள் கலையில் இருக்கும். ஆனால் அவற்றை நான் எப்போதும் சென்ஸார் செய்யவே மாட்டேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x