Published : 21 Aug 2019 12:51 PM
Last Updated : 21 Aug 2019 12:51 PM

செப்.6-ம் தேதி வெளியாகிறது மகாமுனி

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மகாமுனி' திரைப்படம், செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

அருள்நிதி, இனியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெளனகுரு’. 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'மௌனகுரு' படத்துக்குப் பிறகு சாந்தகுமாரின் இரண்டாவது படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், நீண்ட வருடங்கள் கழித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார்.

'மகாமுனி' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்ட பணிகளையும் தொடங்கி முடித்துவிட்டனர்.

இணையத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்த படக்குழு, தற்போது செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’மகாமுனி’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x