Published : 21 Aug 2019 11:51 AM
Last Updated : 21 Aug 2019 11:51 AM

'நம்ம வீட்டுப் பிள்ளை' அப்டேட்: நடிகராக அறிமுகமாகும் பாண்டிராஜின் மகன்

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்புக்கரசுவும் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

'mr.லோக்கல்' படத்துக்குப் பிறகு மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 27-ம் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி படத்தின் முதல் பாடலை இணையத்தில் வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும் மிக முக்கியமானது என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x