Published : 19 Aug 2019 06:36 PM
Last Updated : 19 Aug 2019 06:36 PM

பால் விலை உயர்வு: சி.வி.குமார் ஆதரவு

பால் விலை உயர்வுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சி.வி.குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.4 முதல் ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விலையுர்வு குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ஃபேஸ்புக் பதிவில் “விவசாயம் ... விவசாயி ன்னு போஸ்ட் போட்டவன்லாம் பால் விலை கூடுன உடனே பேஸ்த்தடிச்சு போயிட்டாய்ங்க.... விவசாயி நல்லா இருக்கணும்னா விவசாயப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கணும்... அத நாம தான் கொடுக்க முடியும்....கொடுக்கணும்” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் 'டைட்டானிக்: காதலும் கடந்து போகும்', '4ஜி', 'ஜாங்கோ' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. மேலும், 'இன்று நேற்று நாளை 2' படப்பிடிப்பைத் தொடங்க அவர் ஆயத்தமாகி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x