Published : 10 Aug 2019 02:40 PM
Last Updated : 10 Aug 2019 02:40 PM

ஹெச்.வினோத் கதையில் 'ஹிப் ஹாப்' ஆதி: முன் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்

இயக்குநர் ஹெச்.வினோத் எழுதிய கதையில் 'ஹிப் ஹாப்' ஆதி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை வினோத்தின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளார்.

'ஹிப் ஹாப்' ஆதி, நண்பர் ஜீவாவுடன் இணைந்து 'ஹிப் ஹாப் தமிழா' என்ற பெயரில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். 'மீசைய முறுக்கு' படம் மூலம் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் இவர் நடித்த 'நட்பே துணை படமும்' அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ஹிப் ஹாப்' ஆதி அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத்தின் உதவியாளர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தற்போது 'நேர்கொண்ட பார்வை' மூலம் பாராட்டுகளைப் பெற்று வரும் இயக்குநர் வினோத், இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதவுள்ளார்.

இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x