Published : 09 Aug 2019 08:37 AM
Last Updated : 09 Aug 2019 08:37 AM

திரை விமர்சனம்- நேர்கொண்ட பார்வை 

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடா சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகிய 3 இளம்பெண்களும் சென்னை புறநகர் பகுதியில் தனியே வீடு எடுத்து தங்கி, வேலைக்கு சென்று வருபவர்கள். பள்ளி நண்பர் ஆதிக் ரவிச்சந்திரன் அழைத்ததன்பேரில், மூவரும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கு அறிமுகமாகும் சில இளைஞர் கள், அவர்களிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபடுகின்றனர். இதில் இருந்து தப்பிப்பதற்காக, இளைஞர் அர்ஜுன் சிதம்பரத்தை பாட்டிலால் அடித்து விடுகிறார் ஷ்ரத்தா. அரசியல், பண பலம் கொண்ட அர்ஜுனும், அவனது நண்பர்களும் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பெண்களையும் பழிவாங்கத் துடிக் கின்றனர். ஷ்ரத்தா கொலை முயற்சி யில் ஈடுபட்டதாகவும், மற்ற பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட முயன்றதாக வும் புகார் அளிக்கின்றனர். செய்வதறி யாமல் தவிக்கும் இப்பெண்களுக்கு உதவ முன்வருகிறார் எதிர்வீட்டில் வசிக்கும் அஜித். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் அவர், ஒரு காலத்தில் வெற்றிகரமான வழக்கறிஞர். அரசியல் பின்னணி கொண்ட எதிர் தரப்பு, போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்ட நிலை, அக்கம்பக்கத்தாரால் தவறாகப் பார்க் கப்படும் போக்கு இத்தனை சிக்கல் களில் இருந்தும் அந்த பெண்கள் மீண்டார்களா என்பதே ‘நேர்கொண்ட பார்வை’.

அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான ‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ள படம். முழுக்க அதே களப் பின்னணி யோடு கதைக்களம் நகர்கிறது. பெரும் பாலான ரீமேக் படங்கள், ஒரிஜினல் படத்தின் தரத்துக்கு ஈடுகொடுக்க முடி யாமல் சறுக்கிவிடும். அல்லது தமிழ் சூழலுக்குப் பொருந்தாமல் அந்நியப் பட்டு நிற்கும். ஆனால், இப்படத்தை மூலப்படத்துக்கு இணையாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். பெண்களை அவமதிப்பதில்தான் ஆணின் வீரம் அடங்கியிருப்பதாக தமிழ் சினிமா தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. இதுபோன்ற கற்பிதங்களை ஒவ்வொரு வசனத்திலும் நொறுக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு பெண் மீது தவறான பார் வையை அக்கம்பக்கத்தினர், தெரிந் தவர்கள்தான் அதிகம் பரப்புகின்றனர் என்பதோடு அல்லாமல் அலுவலகம், காவல்துறை உள்ளிட்ட பொதுவெளியும் ஏதோ ஒரு வகையில் பழி சுமத்துகிறது என்பதை சாட்டையடியாக படம் பிரதிபலிக்கிறது.

தனது ரசிகர்களை மகிழ்விக்க மலிவான வசனங்களைப் பேச வேண்டிய தில்லை என்று துணிச்சலான முடி வெடுத்து, உண்மையாகவே கதாநாயகன் அந்தஸ்தை பெண் சமூகத்திடம் இருந்து பெறுகிறார் அஜித். கதாபாத் திரத்தை உணர்ந்து நிதானமான, மிகை யற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறார். படம் தொடங்கி 20 நிமிடங்கள் வரை சில காட்சிகளே வருவது, அந்த இடங்களிலும் வசனம் பேசாமலேயே இருப்பது என இருந்தாலும் தனித்து நிற்கிறார். ஆனால், மிரட்டல் பார்வை, ஜீப், பைக் சாகசம் என தன் வழக்க மான ஆக் ஷனை ஒரே சண்டைக் காட்சி யில் காட்டி, ரசிகர்களை உற்சாகப் படுத்திவிடுகிறார்.

ஷ்ரத்தா, அபிராமி இருவரும் பயம், கோபம், இறுக்கம், பதற்றம் என அழுத்த மான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக நீதிமன்றத்தில் எதிர் தரப்பு வழக்கறி ஞரை எதிர்கொள்ளும் இடங்களில் நடிப்பால் மிரட்டுகின்றனர்.

வித்யாபாலனுக்கு தமிழில் இது முதல் படம். சில நிமிடங்களே முகம் காட்டியிருக்கும் அவர் அஜித்தின் மனைவியாக அன்பையும், நீண்ட காலத்துக்குப் பிறகு தாய்மை அடைந்த பெண்மையின் பூரிப்பையும் திரையில் தவழவிடுவது, அடடா.. ஹைக்கூ கவிதை!

ரங்கராஜ் பாண்டே வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந் துகிறார்.

கதாநாயகியை பளீரென்று காட்ட வேண்டும், கதாநாயகனை பரபரப்பாக காட்ட வேண்டும் என்பதுபோல இல் லாமல், கதையோட்டத்துக்கு அவசிய மான கேமரா கோணங்களை நுட்பமாக அமைத்திருக்கிறார் நீரவ் ஷா. சண்டை உள்ளிட்ட ஆக் ஷன் காட்சிகளில் வித்தி யாசம் காட்டியுள்ளார். பின் னணி இசையில் தனி ராஜ் ஜியம் நடத்தியுள்ள யுவன் ஷங்கர் ராஜா, உமா தேவியின் 'வானில் இருள்' வரிகளுக்கு மெல் லிசையில் வருடி இருக்கிறார்.

அர்ஜுன் சம்பந்தப் பட்ட பிரச்சினையை காதும் காதும் வைத்த மாதிரி முடிக்க வேண் டும் என்று பதறும் ஜெயப்பிரகாஷ் பெரி தாக மெனக்கிடாமல், அதை நீதிமன்றம் வரை போகவிடுவது ஏன்? அதோடு, அவ ரது பின்புலமும் சரி யாக காட்டப்பட வில்லை. நீதிமன் றக் காட்சிகள் பட மாக்கப்பட்ட விதம், வாதங்களை முன் வைத்த விதம் சுவா ரஸ்யமாக இல்லை.

ஆணாதிக்கப் போக்கை கேள்விக்கு உள்ளாக்கும் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக அவ்வப்போது வந்து கொண்டிருக் கின்றன. அதிலும், இதை ஓர் ஆண், அதிலும் ஒரு மாஸ் ஹீரோவின் குரல் வழியாக வெளிப்படுத்தி இருப் பது மிக முக்கியமான தொடக்கம்.

முன்பின் தெரியாத பெண், தோழி, காதலி, பாலியல் தொழிலாளி.. ஏன் மனைவியே ஆனாலும் ஒரு பெண் ‘நோ’ சொன்னால் அதற்கு அர்த்தம் ‘நோ’தான்! என்பது ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கான பாடம். இறுதிக் காட்சியில் நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நிற்கும் பெண் போலீஸ், அஜித்திடம் கைகுலுக்குவது நெகிழ்ச்சி.

காலம் எவ்வளவு மாறினாலும் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி பழக வேண்டும் என சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் எழுதாத சட்டங்களை இந்த திரைப்படம் உறுதியோடு கேள்வி கேட்கிறது. பெண்ணை பாதுகாப்பாக இருக்கச் சொல்லும் சமூகம், ஆணை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதில்லை என்பதை அழுத்தமாய் பேசிய ‘நேர்கொண்ட பார்வை’யை உள் ளன்போடு வரவேற் கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x