Published : 08 Aug 2019 04:18 PM
Last Updated : 08 Aug 2019 04:18 PM

சிம்புவுடன் பணியாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது: வெங்கட் பிரபு  வேதனை

'மாநாடு' படத்தில் சிம்புவுடன் பணியாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது என்று வெங்கட் பிரபு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்டப் பணிகளிலேயே இருந்து வருகிறது. மே மாதம் படப்பிடிப்பு, ஜூன் மாதம் படப்பிடிப்பு என அறிவிப்புகள் வந்தாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.

இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களை சிம்பு வைப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எந்தவொரு தகவலையுமே வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில், சிம்புவின் தாமதத்தால் 'மாநாடு' படத்தை அவர் இல்லாமலேயே தொடர்வது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தற்போது 'மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு இருப்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில், “மாநாடு படத்தில் எனது சகோதரர் சிம்புவுடன் பணியாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது. எல்லாம் நேரம் தான். தயாரிப்பாளர் சந்திக்கும் உணர்ச்சிரீதியான, பணரீதியான அழுத்தத்தை மனதில் கொண்டு அவரது முடிவை நான் மதிக்க வேண்டும். உங்கள் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்குப் பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையைத் தொடங்கியுள்ளது படக்குழு. விரைவில் அது இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x