Last Updated : 24 Jul, 2015 12:36 PM

 

Published : 24 Jul 2015 12:36 PM
Last Updated : 24 Jul 2015 12:36 PM

அனுஷ்காவின் ருத்ரமாதேவி செப். 4-ல் ரிலீஸ்

குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் 'ருத்ரமாதேவி' செப்டம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன், நித்யா மேனன், கத்ரீன் தெரசா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் படம் 'ருத்ரமாதேவி'. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்ற இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் இறுதிகட்டப் பணிகள் உள்ளிட்டவை மும்முரமாக நடைபெற்று வந்தன. இப்படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜா சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவைப் பயன்படுத்தி மிக ஆர்வத்துடன் இசை அமைத்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

ஜூன் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பணிகள் முடியாததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 'ருத்ரமாதேவி' பத்திரிகையாளர் சந்திப்பில் செப்டம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகும் என இயக்குநர் குணசேகர் அறிவித்தார். இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் மூவிஸ் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x