Published : 06 Aug 2019 10:01 AM
Last Updated : 06 Aug 2019 10:01 AM

'துக்ளக் தர்பார்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் மஞ்சிமா ஒப்பந்தம்

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'துக்ளக் தர்பார்' படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

'சிந்துபாத்' படத்தைத் தொடர்ந்து 'சங்கத்தமிழன்', 'கடைசி விவசாயி', 'லாபம்', 'மாமனிதன்', ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

இப்படம் முழுக்க அரசியல் சாந்த படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன், அதிதி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மஞ்சிமா மோகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

'துக்ளக் தர்பார்' படத்தின் வசனங்களை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதவுள்ளார். '96' இயக்குநர் ப்ரேம்குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x