செய்திப்பிரிவு

Published : 05 Aug 2019 15:04 pm

Updated : : 05 Aug 2019 15:20 pm

 

'ஓ பேபி' வெற்றி: சம்பளத்தை உயர்த்திய சமந்தா

samantha-rises-remuneration-after-obaby-success

'ஓ பேபி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால், சம்பளத்தை 3 கோடி ரூபாய்க்கு உயர்த்திவிட்டார் சமந்தா

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ பேபி’. ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் தழுவல் இது. தெலுங்கில் சுமார் 45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொரியன் படத்தின் தழுவல் என்றாலும், இந்தப் படத்தை சீனாவில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘மாம்’ படம் சீனாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘ஓ பேபி’ திரைப்படம் அங்கு எவ்விதப் பிரச்சினையுமின்றி வெளியானால், பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம், இரண்டாவது இந்தியப் படம் என்ற பெருமையை ‘ஓ பேபி’ திரைப்படம் பெறும்.

பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால், தன் சம்பளத்தை ரூ. 3 கோடிக்கு உயர்த்திவிட்டார் சமந்தா. தற்போது கதைகள் கேட்க வேண்டும் என்றாலே ரூ.3 கோடி சம்பளத்துக்கு சம்மதமா? என்று கேட்டுவிட்டுத் தான் கதை கேட்கிறார்.

தற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் 'மன்மதுடு 2' -வில் சிறு கதாபாத்திரத்திலும், '96' ரீமேக்கிலும் சமந்தா நடித்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து எந்தவொரு புதிய படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகவில்லை.

ஓ பேபிசமந்தாநந்தினி ரெட்டிஓ பேபி வெற்றிசம்பளத்தை உயர்த்திய சமந்தாSamanthaSamantha salary

Popular Articles

You May Like

More From This Category

More From this Author