Published : 29 Jul 2019 05:46 PM
Last Updated : 29 Jul 2019 05:46 PM

பிக் பாஸ் சரவணின் அதிர்ச்சி வாக்குமூலம்: சின்மயி விமர்சனம்

காலேஜ் படிக்கும்போது பெண்களை உரசவே பஸ்ஸில் செல்வேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரவணன் பகிரங்கமாக சொன்ன நிலையில், அந்தக் கருத்தை ஆதரித்து சிரித்த அனைவரையும் விமர்சித்துள்ளார் பாடகி சின்மயி.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் வெளியான அத்தியாயத்தில் கமல்ஹாசன் அரசுப் பேருந்து பயணத்தில் பெண்கள் இடிபடுவது குறித்துப் பேசுகிறார். அப்போது குறுக்கிடும் நடிகர் சரவணன், ''காலேஜ் படிக்கும்போது பெண்களை உரசவே பஸ்ஸில் செல்வேன்'' என்று கூறி கையை உயர்த்துகிறார். 

முதலில் இதற்கு அதிர்ச்சியடைந்து ஐய்யய்யோ.. எனக் கூறும் கமல்ஹாசன் பின்னர் சரவணன் இப்ப அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் எனக் கூறுகிறார். இதற்கு அரங்கில் இருக்கும் பெண்கள் பலரும் கைதட்டி சிரிக்கின்றனர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சின்மயி, "நடிகர் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாகக் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு அது நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் கைதட்டுகிறார்கள்" என்று கண்டன ட்வீட் பதிவு செய்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x