Published : 21 Jul 2019 02:05 PM
Last Updated : 21 Jul 2019 02:05 PM

'நடிப்புல நான் மூணாவதுதான்!’ - நடிகர்திலகம் நினைவு நாள் இன்று! 

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நினைவுநாள் இன்று (21.7.19). இந்தநாளில், அவரின் சாதனைகளை அறிந்து உணர்ந்து அவரைப் போற்றுவோம். 

41.  'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

42.  சிவாஜியின் தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!

43. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற சரித்திரப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன.

43. எம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என 'தா' என்ற எழுத்தில்  தொடங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு 'பா' வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியைத் தந்தன. 

44.  1962-ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் 'ஒரு நாள் மேயர்' சிறப்பு அந்தஸ்தை பெற்றார். 

45. பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம்  சிவாஜி தன்னடக்கமாக!

46. சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார் - இப்படிச் சொன்னவர் நடிகர் சிவகுமார்.

47. கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் சிவாஜிகணேசனுக்கு பிடித்தமான விளையாட்டுகள்!

48.  அதுவரையில் எம்.ஜி.ஆருடன் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா முதன்முதலாக சிவாஜியுடன் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது சிவாஜி கவிஞர் வாலியிடம்...  ‘’யோவ் வாலி அந்தப் பொண்ணு  ஜெயலலிதா, அங்கேருந்து இப்ப நம்மக்கிட்ட வந்து சேர்ந்து நடிக்க வந்திருக்கு. அதையெல்லாம் நினப்புல வெச்சிக்கிட்டு பாட்டு எழுதுய்யா’’ என்று சொல்லியிருக்கிறார்.  சிவாஜி சொன்னபடியே வாலி எழுதிய பாட்டுதான்:  ‘நல்ல இடம்... நீ வந்த இடம்...வர வேண்டும் காதல் மகராணி’ என்ற பாடல்.

49.  சிவாஜி கணேசனுக்கு சொந்தமான  சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது.  சென்னையின் முதல் ஏ.சி தியேட்டர் என்ற பெருமைகொண்ட  இந்தத் தியேட்டரில்  ’பாவமன்னிப்பு’ படம்தான் முதன்முதலில் திரையிடப்பட்ட சிவாஜி கணேசனின்  திரைப்படம். இந்தத் தியேட்டர் இப்போது இடிக்கப்பட்டு மல்டிபிள் காம்ப்ளெக்ஸ் ஆக உருமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

50. 2001-ல்  சிவாஜிகணேசன் மறைந்தபோது, அவர்   காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது.  அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன்சின்கா இந்த தபால் தலையை வெளியிட்டார்.

தொகுப்பு : மானா பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x