Published : 21 Jul 2019 01:01 PM
Last Updated : 21 Jul 2019 01:01 PM

'இந்தியன் 2' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்?

'இந்தியன் 2'வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

'இந்தியன்' படம் வெளியாகி 22 ஆண்டுகள் கழித்து 'இந்தியன் 2' உருவாகவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

படப்பூஜைக்குப் பிறகு இந்தப் படத்தில் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தையும் சுபாஷ்கரன் - ஷங்கர் இருவரும் அமர்ந்து பேசி சரிசெய்துவிட்டனர். ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க ஆயுத்தமாகி வருகிறார்கள்.

காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர். விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தற்போது 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வரும் கமல், அதற்குப் பிறகு 'இந்தியன் 2' மற்றும் 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்களில் மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x