செய்திப்பிரிவு

Published : 16 Jul 2019 21:09 pm

Updated : : 16 Jul 2019 21:11 pm

 

லீக்கான 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

bigil-song-leaked-online

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் ஒரு பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏஜிஎஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் 'பிகில்' படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். 'தெறி', 'மெர்சலு'க்குப் பின் அட்லீயுடன் விஜய்யின் மூன்றாவது படம் இது. அதே போல 'மெர்சல்', 'சர்காரு'க்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் விஜய்க்கு தொடர்ந்து மூன்றாவது படம் இது.

படத்தின் முதல் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. முதன் முறையாக ரஹ்மான் இசையில் விஜய் பாடவுள்ளார் என்ற செய்தியும் சில நாட்கள் கழித்து வந்தது. தற்போது படத்தின் 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் இணையத்தில் கள்ளத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளது.

விவேக் எழுதியுள்ள வரிகள் பெண்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை ரஹ்மான் பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. #BigilLeaked #BigilSongLeaked #Singapennae உள்ளிட்ட ஹாஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

பாடலின் இறுதி வடிவம் இதில்லை என்றாலும் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். பாடல் லீக் குறித்து படக்குழு விசாரித்து வருவதாகத் தெரிகிறது. 

பிகில் பாடல்பிகில் லீக்விஜய் படப் பாடல்அட்லீ பாடல்ரஹ்மான் பாடல்#BigilLeaked#BigilSongLeaked#Singapennae
Popular Articles

You May Like

More From This Category

More From this Author