Last Updated : 07 Jul, 2015 02:47 PM

 

Published : 07 Jul 2015 02:47 PM
Last Updated : 07 Jul 2015 02:47 PM

பார்த்திபன் இயக்கத்தில் நிவின் பாலி?

தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் நிவின் பாலி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது நிவின் பாலியை பல்வேறு தமிழ் இயக்குநர்களும், தங்களது படத்தில் நடிக்க தேதி கேட்டு அணுகி வருகிறார்கள்.

இந்நிலையில் பார்த்திபன் இயக்கவிருக்கும் படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பார்த்திபன் தரப்பில் விசாரித்த போது, "பார்த்திபன் சார் கொச்சின் சென்ற போது, நிவின் பாலியை சந்தித்து படம் குறித்து பேசியது உண்மை தான்.

ஆனால், நிவின் பாலி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. தற்போது 6 கதைகளை முடித்து வைத்திருக்கிறார். விரைவில் எந்த படம் யார் நாயகன் என்பது எல்லாம் அவரே அறிவிப்பார்" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x