Last Updated : 24 Jun, 2015 11:04 AM

 

Published : 24 Jun 2015 11:04 AM
Last Updated : 24 Jun 2015 11:04 AM

விக்ரம் படத்தில் ப்ரியா ஆனந்துக்கு பதிலாக பிந்து மாதவி

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமான வேடத்தில் தற்போது பிந்து மாதவி நடிக்க இருக்கிறார்.

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க, ஆனந்த் ஷங்கர் இயக்கிய படம் 'அரிமா நம்பி'. ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்த இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.

'அரிமா நம்பி' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தின் நாயகனாக விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள். இந்நிலையில் தற்போது ப்ரியா ஆனந்த்துக்கு பதிலாக பிந்து மாதவி நடிக்க இருக்கிறார். விக்ரம் படத்தில் இருந்து விலகியிருப்பதை, ப்ரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x