Published : 18 May 2014 02:31 PM
Last Updated : 18 May 2014 02:31 PM

புதிய மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் குறைவு: பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 5 பேரும் தோல்வி

16-வது மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, 2014 தேர்தல் முடிவுகளை ‘தி ஹிந்து’ ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்களவையில் இடம்பெற்றிருந்தனர். கடந்த 20 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 25-க்கும் மேற்பட்டவர்களும், 1980 89-க்கு இடைப்பட்ட காலத்தில் 40க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற்றிருந்தனர்.

தற்போதைய தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் 5 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்துவிட்டனர். பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து 1 முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16-வது மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசியவாத காங்கிரஸ் சார் பிலும், ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

மக்களவையில் முஸ்லிம் உறுப் பினர் எண்ணிக்கை குறைந்துள்ள தற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில், “தேசிய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப்பதவிக்கு பொருத்தமற்றவர்களாக ஆக்கப் படுவார்கள்” என்றார்.

பெண் உறுப்பினர்கள் உயர்வு

மக்களவையில் பெண் உறுப்பினர் கள் எண்ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந் தாலும், 16-வது மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந் துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது.

தற்போதைய மக்களவைக்கு பாஜக சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப்பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டியிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை.

நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x