Last Updated : 08 Apr, 2015 04:08 PM

 

Published : 08 Apr 2015 04:08 PM
Last Updated : 08 Apr 2015 04:08 PM

காஞ்சனா 2-க்கு யு/ஏ சான்றிதழ்: ஏப்ரல் 17-ல் ரிலீஸ்

'காஞ்சனா 2' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி படம் வெளியாகிறது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2'. டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். முதல் பிரதி அடிப்படையில் லாரன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

லாரன்ஸுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இடையில் தடைப்பட்ட படப்பிடிப்பை முழுவீச்சாக முடித்தார்கள். அதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்றது.

அனைத்து பணிகளும் முடிந்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள்.

சென்சார் பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x