Published : 13 Apr 2015 08:58 AM
Last Updated : 13 Apr 2015 08:58 AM

ராஜேந்திர சோழனின் வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும்: இல.கணேசன்

ராஜேந்திர சோழனின் வரலாற்று பெருமைகள் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

சிவசுந்தரி கலைக்கூடம் சார் பில் ராஜேந்திர சோழன் மணிமுடி சூடிய 1000வது ஆண்டு நிறைவு விழா நேற்று மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:

தமிழ்நாட்டின் அடையாளமாக ராஜேந்திர சோழனின் பெருமை களை கூற முடியும். ஆனால், தமிழர்களுக்கே அவரை யார் என்று தெரிவதில்லை. எனவே, பாடப்புத்தகத்தில் ராஜேந்திர சோழனின் வரலாறு இடம்பெற வேண்டும்.

வாஸ்கோ டா காமாவுக்கு ‘கப்பல்’ என்ற வார்த்தை அறியும் முன்பே நமது முன்னோர் கள் கப்பல்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

கர்நாடகாவிலிருந்து இன்று தண்ணீர் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ராஜேந்திர சோழன் அப்போதே, காவிரி ஆற்றின் நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க 50க்கும் மேற்பட்ட கால்வாய்கள் வெட்டி தஞ்சைப் பகுதியை வளமானதாக மாற்றினார்.

ராஜேந்திர சோழனின் ராஜ்ஜியம் இலங்கையில் அனுராதபுரம் வரை பரவியிருந் தது. இலங்கையில் உள்ள சிங்களர்கள் வந்தேறிகள். அவர்கள் தென்பகுதி வழியாக நாட்டின் உள்ளே நுழைந்து, காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து பின் மேலே நகர்ந்து வந்தனர். ஆனால், அனுராதபுரத்தில் சோழனின் ஆட்சி இருந்ததால் அதை தாண்டி அவர்களால் செல்ல இயலவில்லை என்று வரலாற்று பதிவு கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்ரமணியன், ’சிவாலயம்’ ஜெ.மோகன், தமிழ்நாடு தொல்லி யல் துறை முன்னாள் உதவி உயக்குநர் கி.தரன், சிவசுந்தரி கலைக்கூடத்தின் நிறுவனர் பூசை. ச. ஆட்சிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மா.கி.ரமணன், சுப்பு, தென்னம் பட்டு ஏகாம்பரம், வேதநாராயணன் ஆகியோரின் ஆன்மீக பங்களிப் புக்காக விருதுகள் வழங்கப்பட் டன. ஓங்கு புகழ் ஒற்றியூர் , திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருப்பதிகம், கங்கைகொண்ட சோழபுரம் திருவிசைப்பா ஆகிய நூல்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x