Published : 08 Apr 2015 06:42 PM
Last Updated : 09 Apr 2015 12:22 PM
செய்தி: >நிலச் சட்டம் நிறைவேறினால் நிலமில்லா 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு: ஜேட்லி தகவல்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஜெயன்னஸ் ஜெயராமன் கருத்து
எப்படி 30 கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை விளக்குவாரா? அதே நிகழ்சியில் பேசிய பிரதமர் "நாட்டிலுள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் 1.25 கோடி மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளிக்கின்றன. சிறு தொழில் நிறுவனங்கள் சுமார் 12 கோடி மக்களை பணியில் அமர்த்தியுள்ளன" என்று பேசியிருக்கிறார்.
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் தொழில் துறையில் மொத்தம் 13.25 கோடி பேருக்குத்தான் வேலை. விவசாயத்தில் 60% பேர் வேலை பெறுகிறார்கள். 30 கோடி பேருக்கு விவசாயமில்லாத துறைகளில் எத்தனை ஆண்டுகளில் இவர்களால் 30 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த முடியும்.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகாக புளுகுகிறார்கள். படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான்.