Last Updated : 31 Mar, 2015 11:50 AM

 

Published : 31 Mar 2015 11:50 AM
Last Updated : 31 Mar 2015 11:50 AM

இது நம்ம ஆளு படத்துக்கு முன்பே வெளியாகிறதா ஹைக்கூ?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'இது நம்ம ஆளு' படத்துக்கு முன்னரே 'ஹைக்கூ' வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்துக்கு ஆன தாமதத்தால், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்காக முதல் பிரதி அடிப்படையில் 'ஹைக்கூ' படத்தைத் தொடங்கினார் பாண்டிராஜ். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் 3 பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது.

'இது நம்ம ஆளு' பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், 'ஹைக்கூ' பணியில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதனால், 'ஹைக்கூ' பணிகள் முடிவுற்று விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறது படக்குழு.

'36 வயதினிலே' படத்தின் இசை வெளியீடு, படம் வெளியீடு என முடித்துவிட்டு, 'ஹைக்கூ'வை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x