Last Updated : 25 Mar, 2015 08:17 PM

 

Published : 25 Mar 2015 08:17 PM
Last Updated : 25 Mar 2015 08:17 PM

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும்: அருண் ஜேட்லி

நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏப்ரல் 5-ம் தேதிக்குள் சட்டமாக இயற்றப்பட வேண்டும், இல்லையெனில் அது காலாவதியாகிவிடும்.

"இது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும்" என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது கூறினார்.

தொழிற்துறை மற்றும் பிற திட்டங்களுக்காக கடந்த டிசம்பரில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர கடந்த ஆண்டு அவசரச் சட்டம் தாக்கல் செய்தது.

விதிமுறைகளின் படி, இந்த அவசரச்சட்டம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு 6 வாரங்களுக்கு முன்னதாக சட்டமாக மாற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கியது. இதன்படி ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் நிலம் கையகப்படுத்தும் மசோதா சட்டமாக இயற்றப்பட வேண்டும், இல்லயேல் அது காலாவதியாகிவிடும்.

இதனால் இந்த விவகாரத்தை அரசு கையிலெடுக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி, “அமைச்சரவை கூட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

இங்கு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. குறைந்தது இந்த சட்ட சீர்திருத்தங்கள் சில மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சட்டத் திருத்தங்களை விரும்பாதவர்களால் அதனை தடுக்க முடியாது.

எனவே, ஒரு மாநிலம் நானும் வளர மாட்டேன், மற்ற மாநிலங்களையும் வளர விடமாட்டேன் என்ற நிலையை ஏற்க முடியாது. இது ஏற்கக்கூடிய பொருளாதார கூற்று அல்ல.

2013-ம் ஆண்டு நிலச் சட்டத்தில் 13 விலக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இப்போது 18 ஆக உயர்ந்துள்ளது. அந்த 13 விலக்கப்பட்ட பகுதிகளிலும் கூட மேம்பட்ட இழப்பீடு வழங்கும் பிரிவு இருந்தது. எனவே அந்த 13 பகுதிகளுக்கான இழப்பீடு எப்போதும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்." என்றார் ஜேட்லி.

மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் அங்கு இந்த மசோதா எதிர்கட்சிகளால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x